5 வயது மகனுக்கு தலைக்கவசம் வாங்கிய தந்தை அஜித்..!

 
மகனுடன் நடிகர் அஜித்

நடிகரும் பைக் ரேஸ் வீரருமான அஜித் குமார் தனது மகனுக்கு சின்னதாக ஒரு தலைக்கவசம் வாங்கி தந்துள்ளார். இப்புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை விட, போட்டோகிராஃபி மற்றும் பைக் ரேஸிங்கில் மிகுந்த ஆர்வமுண்டு. சமீபத்தில் வலிமை பட ஷூட்டிங்கை முத்துவிட்ட அஜித், உலகின் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தார்.

தன்னுடைய பிஎம்டபுள்யூ பைக்கில் தான் அவர் பைக் டூரிங் செய்தார். அதை தொடர்ந்து தேசியளவில் பல்வேறு இடங்களுக்கு பைக் டூரிங் செய்து வருகிறார். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் மத்திய அரசு பைக்கில் செல்லும் 9 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதையடுத்து நடிகர் அஜித் தன்னுடைய 5 வயது மகன் ஆத்விக்குக்கு தனியாக ஹெல்மெட் வாங்கியுள்ளார்.

அதுதொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அஜித்குமார் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஜன 14-ம் தேதி பெங்கல் அன்று வெளிவரவுள்ளது.

From Around the web