தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்கும் அஜித் பட வில்லன்..! 

 
1

தனுஷ் இயக்கி நடித்து வெளியான படம் ‘ராயன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால் நாயகன் மற்றும் இயக்குநர் என இருவருக்கும் பாராட்டு தெரிவித்து 2 காசோலைகளை தனுஷுக்கு அன்பளிப்பாக வழங்கினார் கலாநிதி மாறன். தற்போது ‘குபேரா’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். மேலும், இயக்குநராக மட்டுமே பணிபுரிந்து வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்தப் படங்களை முடித்துவிட்டு, மீண்டும் படமொன்றை இயக்கவுள்ளார் தனுஷ்.

இந்தப் படத்தை ஆகாஷ் தயாரிக்கவுள்ளார். இவர் தான் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘புறநானூறு’ படத்தினையும் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் இயக்கவுள்ள படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. நாயகனா அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரமா என்பதில் சஸ்பென்ஸ் வைத்துள்ளது படக்குழு.

தனுஷ் படத்தில் நடிப்பதற்கு அருண் விஜய்க்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்புக்கு செல்வதற்கான முதற்கட்டப் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளார் தனுஷ்.

தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய்.

From Around the web