அவர் நடிச்ச படம் குறித்துப் பேசவே அவமானமாக இருக்கும் அஜித்துக்கு எதன் அடிப்படையில் விருதுன்னு புரியல - வலைப்பேச்சு அந்தணன்..!

 
1

தமிழ்நாட்டில் 13 பேருக்கு பத்மபூஷன் விருது வழங்கவுள்ளதாக அறிக்கை வெளியானது.அதில் நடிகர் அஜித்தின் பெயரும் குறிப்பிட்டிருந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கின்றனர். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் இது குறித்து ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.அதாவது பட ப்ரோமோஷன்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்து கொள்ளாத இவர் எவ்வாறு இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்வார்.மற்றும் மீடியா முன் எந்த வித நேர்காணலையும் செய்வதற்கு இவர் விரும்பியதில்லை இருப்பினும் கார் ரேசிங்கில் வெற்றி பெற்றதும் தொடர்ந்து பல நேர்காணலை செய்து வந்தார்.தேவைக்கு மட்டுமே பழகும் அஜித் வன்ம கிடங்கா இல்லை நானா என குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் தி.மு .க கட்சியினை எதிர்த்த அஜித் தற்போது "red giant movies" உடன் படம் பண்ணுவதற்கு ஒத்துக்கொண்டுள்ளமையினால் இது விஜய்க்கு எதிரான தீர்மானம் எனவும் இவருக்கு இந்த பத்மபூஷன் விருதுக்கு இவர் நடிகனாகவோ அல்லது சிறந்த விளையாட்டு வீரனாகவோ பெறுவதற்கு தகுதியற்றவர் என கூறியுள்ளார்.

நடிகர் அஜித்துக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டிருக்கு என்ற செய்தியைக் கேட்டதும் இவர் எந்த நிகழ்ச்சிக்கும் போமாட்டாரே, அதுவேறு போகாமல் விட்டுவிட்டால் சர்ச்சையாகிடுமேன்னு பயந்தேன்.,எனக்குத் தெரிந்து அவருக்கு இந்த விருதினை அறிவிப்பதற்கு முன்பு, அவரது பிரைவைசியைக் கெடுக்க முடியாதுன்னு நினைச்சிருக்கலாம். அவரது கொள்கையே பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்பதுதான். அப்படிப்பட்டவருக்கு விருதுகொடுத்தால், அவரது மனநிலை என்னவாக இருக்கும். நான் பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன், என்னை ஏன் கூட்டி வந்திருக்கீங்கன்னு கொஞ்ச நேரம் வரை நினைச்சேன்.,அதன்பின் தான் அவரது அறிக்கை வந்தது. அதனால் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவிச்சிருந்தார். அடுத்து பரவாயில்லை, ஏத்துக்கிட்டார்னு தோணுச்சு.,பாரதிராஜா எல்லாம் பத்மவிருதை காவிரி பிரச்னையில் விருதுகளைத் திருப்பித் தர்றேன்னு சொல்லிட்டு இருந்தார். இப்படியெல்லாம் விருதுகளை வாங்கிட்டு திரும்பித் தருகிறேன்னு பிரச்னை பண்ணுவாங்க. அஜித்தை பொறுத்தவரை எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளமாட்டாரே, அப்படியிருக்க, ஏன் திருப்பிக் கொடுக்கபோறேன்னு நிற்கப்போறார்.,

நடிகர் அஜித்துக்கு இப்படி விருதுகொடுக்கப்போறாங்கன்னு புரியல. ஒரு நடிகராக நினைத்துக் கொடுத்தாங்க என்றால், அவரே அந்த விருதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.,ஏனென்றால், அவரே தன்னை அப்படி நடிகராக நினைக்கல. திரையுலகம் சார்ந்த எந்தவொரு நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்றதும் கிடையாது. அவரை வைத்து படமெடுப்பவர்களை அவர் மதித்ததும் கிடையாது.,ஒரு இசைவெளியீட்டு விழாவுக்கு வந்தது கிடையாது. ஸ்டில்ஸை பகிர்ந்தது கிடையாது. அவர் நடிச்ச படம் குறித்துப் பேசவே, அவமானமாக இருக்கும் ஒரு நபருக்கு, எதுக்கு சினிமாவில் பெரிய சாதனையைப் பண்ணிட்டார்னு இந்த அவார்டை கொடுத்தாங்கன்னு தெரியல.,ஒரு வேளை, விளையாட்டில் மிக சாதனை செய்திருக்கார்னு நினைத்து, இந்த விருது அறிவிச்சிருதாங்க என்றால், அவர் இன்னும் அந்த இடத்துக்குப் போகவில்லை என்பது தான், என் கருத்து. இந்த கார் ரேஸிலும் அவர் மூன்றாவது இடத்துக்கு தான் வந்திருக்கார். அதிலும், அவர் ஓட்டலை. வேறு ஒரு நபர் ஓட்டிதான், அந்த இடத்துக்கு வந்திருக்கார். விளையாட்டின் அடிப்படையில் கொடுக்க நினைத்தால், மத்திய அரசு அஜித்துக்கு விருதுகொடுக்கக் கூடாது, அது ஒரு பக்கம்.,

அப்போது சிறந்த மனிதாபிமானியான்னு சொல்றேன். நிறைய பொய் தான் சொல்றாங்க. அவர் தன் வீட்டை மழைக்காலத்தில் ஆயிரம் பேருக்குத் திறந்துவிட்டார். தலா பத்தாயிரம் கொடுத்தார்னு எல்லாம் அடிச்சு விடுவாங்கே. ஆயிரம் கண் ஆப்ரேஷன் பண்ண உதவியிருக்கார்னு ஒரு நடிகரே சொல்லியிருக்கார். என்னத்த சொல்ல.,அப்படி மனிதாபிமானத்துக்காக இந்த விருது கொடுக்கப்பட்டிருக்கா என்றால் அதுவும் இல்லை. சரி என்னவாக இருக்கும்ன்னு நாம் போய் அலசினால், அரசியல் தான் காரணம். அதைக் கண்கூடாக அறிவித்தது அண்ணன் சீமான் தான். ஊர்க்கு முன், ஒரு வாழ்த்துப்போட்டிருக்கார். அதில் திரையுலகில் உச்சம்தொட்ட அஜித்குமாருக்கு வாழ்த்துகள் எனச் சொல்கிறார். திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போது, நான்விட்டுவிட்டு வந்தேன் என்று ஒருவர் சொன்னார் பாருங்க. இரண்டையும் சேர்த்துப் பாருங்க.,இதற்குப் பின் இருப்பது அஜித் ரசிகர்களின் வாக்கு. பாஜக தமிழ்நாட்டில் தனது வாக்கு வங்கிக்காக அஜித்தினை இழுக்கப்பார்க்கிறது. அப்படி சில நகர்வுகள் நடக்கிறது. அப்படி தான் அஜித்துக்கு விருதுகொடுத்திருக்காங்கன்னு நான் நம்புறேன். இவர் நடிகர் சங்கத்துக்குமே ஒன்றும் செய்யல'' என வலைப்பேச்சு அந்தணன் பேட்டியளித்திருக்கிறார்.,

From Around the web