அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் குமார் வாழ்த்து..!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி கே. பழனிசாமிக்கு நடிகர் அஜித் குமார் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
 
 
ajith kumar

தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகரான அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் கடந்த 24-ம் தேதி காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டுத் துறை பிரபலங்கள், நடிகர் - நடிகைகள், பொதுமக்கள் என பல தரப்பினர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

கடந்த புதன்கிழமை முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் சி. விஜயபாஸ்கர், சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அஜித் குமாரின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி போனில் அழைத்து நடிகர் அஜித்திடம் ஆறுதல் கூறினார்.

மேலும், அ.தி.மு.க கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளதற்கு அவருக்கு அஜித் வாழ்த்துக்களை கூறினார். பொது நிகழ்ச்சிகள் எதற்கும் அஜித் குமார் வர விரும்பமாட்டார். அதேபோன்று தனது அரசியல் நிலைபாட்டையும் அவர் வெளியே காட்டமாட்டார்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  போனில் பேசிகொண்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web