நடிகர் அஜித்துக்கு என்னாச்சு..?? அதிர்ச்சி தரும் சமீபத்திய புகைப்படம்..!!

சமீபத்தில் எடுக்கப்பட்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. அதை பார்க்கும் பலர் நடிகர் அஜித் விரைவாக முதுமை அடைந்து வருவதாக கூறுகின்றனர்.
 
ajith

நடிகர் அஜித் தற்போது குடும்பத்தினருடன் உலக சுற்றுலா சென்றுள்ளார். பல்வேறு நாடுகளில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகும். அண்மையில் இங்கிலாந்து சென்றிருந்த அஜித், லண்டனின் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

shalini and ajith

அதையடுத்து தற்போது போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முன்னதாக துபாய்க்கு சென்றிருந்த போது, சொகுசுக் கப்பல்  பயணத்தின் போது மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த போட்டோக்களை ஷாலினி தனது இன்ஸ்டாவிலும் பதிவிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு க்ளீன் ஷேவ் செய்த அஜித்தை பார்க்க முடிந்தது. அதை பார்க்கும் பலரும் அஜித்துக்கு மிகவும் வயதாகிவிட்டதாகவும், அது புகைப்படத்தின் மூலம் நன்றாக தெரிவதாகவும் கமெண்டு செய்துள்ளனர்.

ajith family

மேலும் இந்த புகைப்படத்தில் ஷாலினி பார்ப்பதற்கு நடிகர் அஜித்தின் மகள் போல இருப்பதாகவும், அவர் தனது உடல்நலனின் அக்கறை காட்ட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் துணிவு படத்தில் பார்த்ததை விடவும், இந்த புகைப்படத்தில் அஜித் பார்ப்பதற்கு சற்று பருமனாக இருப்பதாக கூறியுள்ளனர்.
 

From Around the web