சபரிமலையிலும் அஜித் படத்தின் டீசரை கேட்ட ரசிகர்கள்..!
Nov 23, 2024, 06:05 IST
அஜித்தின் புதிய படம் "விடாமுயற்சி" டீசர் வெளியிடப்பட வேண்டும் என்று சபரிமலையில் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கையில் பேனர்கள் பிடித்து, "அஜித்தே கடவுளே" என்று முழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
சமீப காலமாக, "அஜித்தே கடவுளே" என்ற முழக்கம் அஜித் ரசிகர்களிடையே அதிகமாக பிரபலமாகியுள்ளது. எந்த இடமாக இருந்தாலும்,பல நிகழ்வுகளில் இந்த வாசகம் ஒலிக்கிறது. இதுவே ரசிகர்களின் அஜித்தின் மீதான பாசத்தைப் பிரதிபலிக்கிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.வீடியோவைப் பார்த்த சிலர் இதனை ரசித்து பாராட்டியுள்ளதோடு, மற்ற சிலர் இவ்வாறான செயல்கள் ஆன்மிக இடங்களில் தேவையா என கேள்வியெழுப்பியுள்ளனர்.