அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ மாஸ் செகண்ட் லுக் போஸ்டர்..!

 
1

ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கும் அஜித்தின் 63வது திரைப்படமானது "குட் பேட் அக்லி".இத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் ஆகியோர் தயாரிகின்றனர். மேலும் இப்படத்திற்கான இசையை தேவி ஸ்ரீ பிரசாத் வழங்க அபிநாதன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும் வருகிற பொங்கலுக்கு படத்தை திரையில் எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் படம் குறித்து தற்போது வெளியான செய்தி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் 'குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் அஜித் மாஸ் போஸில் இருக்கும் நிலையில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளது போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் போஸ்டரில் ’God Bless You மாமே’ என்ற வாசகம் இருப்பதை அடுத்து இதுதான் அந்த பாடலின் முதல் வரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு  தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பதால் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகி உள்ள இரண்டாவது லுக் போஸ்டரிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.


 

From Around the web