அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
Apr 1, 2025, 07:05 IST

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,ஜோகிபாபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப் படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியிருந்தது. இந்த பாடலிற்கு ஜிவி இசையமைத்துள்ளதுடன் பாடலினை அனிருத் மற்றும் பால் டப்பா இணைந்து பாடியுள்ளனர்.
இந்த படத்தினை ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது. மேலும் படத்திற்கான இசைப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதுடன் படத்தின் ட்ரைலர் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.