மீண்டும் நடிக்க வரும் அஜித் ஹீரோயின் அதுவும் 12  ஆண்டுகள் கழித்து..!!
 

 
1

அஜித்தின் உன்னைத்தேடி படம் மூலம் நடிகையானவர் மாளவிகா. 2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார்.

2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார்.இவர் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா அதன் பின் சினிமாவில் நடிக்கவில்லை. 

1

கர்ப்பமானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சிவா, ஜீவா நடிக்கும் கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.கோல்மால் படத்தில் ஜீவாவின் பாஸாக நடிக்கிறார் மாளவிகா. படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. 

From Around the web