சினிமா வாழ்க்கையில் முதன்முதலாக வலிமை படத்துக்காக அஜித் புதிய முயற்சி..!

 
சினிமா வாழ்க்கையில் முதன்முதலாக வலிமை படத்துக்காக அஜித் புதிய முயற்சி..!

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்துக்கான தன்னுடைய சினிமா வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு பயிற்சி செய்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே குழுவுடன் அஜித் நடித்து வரும் படம் வலிமை. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. அஜித் படம் ஒன்று நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருப்பது இதுவே முதல்முறை.

எனினும் வரும் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நடிகர் அஜித் ரசிகர்களும், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கையில் வலிமை படத்துக்காக அஜித் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி பற்றி தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி அஜித் இந்த படத்துக்காக முதன்முறையாக ஒரு பேருந்தை ஓட்டியுள்ளார். 

படத்தில் வரக்கூடிய சேஸிங் காட்சிக்காக அஜித் பேருந்து ஓட்டி பழகியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த காட்சி படத்துக்கு ஹைலைட்டாக இருக்கும் எனவும், மிகவும் மாஸான வகையில் படமாக்கப்பட்டுள்ளது என வலிமை படக்குழு தகவல் தெரிவிக்கிறது. 
 

From Around the web