அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!
Dec 18, 2023, 06:05 IST

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா, திரிஷா, ஆரவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தில் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
டிஜிட்டல் உரிமையை 150 கோடி ரூபாய்க்கு netflix நிறுவனமும் சாட்டிலைட் உரிமையை 100 கோடி ரூபாய்க்கு சன் டிவி நிறுவனமும் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.