பீஸ்ட், அண்ணாத்த படங்களுக்கு முன்னரே வெளியாகும் அஜித்தின் வலிமை..!

 
ஹெச். வினோத் மற்றும் அஜித்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படம் விஜய் நடித்து பீஸ்ட் மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படங்களுக்கு முன்னரே திரையரங்குகளில் வெளியாகும் விபரம் தெரியவந்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. சுமார் ஓராண்டுக்கும் மேலாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இதுவரை படம் தொடர்பான ஒரே அப்டேட் கூட வெளியாகவில்லை. இது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ ஆகிய படங்கள் வலிமை படத்துக்கு பின்னர் தொடங்கப்பட்டவை ஆகும். ஆனால் அந்த இரண்டு படங்களுமே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு, வெளியீட்டு அறிவிப்பை தெரிவித்துவிட்டன.

எனினும் வலிமை படக்குழுவிடம் இருந்து மூச்சுக்குட வெளிவரவில்லை. கொரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், இன்னும் 10 நாட்கள் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த இயக்குநர் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் வலிமை படம் ரஜினியின் அண்ணாத்த மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்கள் வெளிவருவதற்கு முன்னரே ரிலீஸாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இதனால் இந்த முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web