அஜித்தின் வீரம் படத்தினால் என் வாழ்க்கையே காலி..!பிரபல நடிகை பகீர் பேட்டி..!
Feb 9, 2025, 06:35 IST
நடிகை மனோசித்திரா பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் , வீரம் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையே பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதாவது வீரம் படத்தில் நடிகை தமன்னாவிற்கு தோழியாக உள்ள கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தினை ஆரம்பிக்கும் போது தமன்னா பாதியில் இறந்துவிடுவார் என்றும் இறுதியில் அஜித்திற்கு ஜோடியாக தன்னை விடுவதாகவும் கூறியிருந்தனர்.
ஆனால் போக போக அவர்கள் கூறியது உண்மை இல்லை என்பது எனக்கு தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், வீரம் படத்தினால் கதாநாயகியாக இருக்க வேண்டிய நான் இப்போது எந்த படங்களிலும் நடிக்காது உள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
 - cini express.jpg)