13 ஆண்டுகளுக்கு பிறகு மிஷ்கினுடன் கைக்கோர்க்கும் அஜ்மல்..!

 
அஜ்மல்
நெற்றிக்கண் படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் அஜ்மல் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார். ரசிகர்களிடம் இவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் மிஷ்கின் தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில். மேலும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தில் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ;அஞ்சாதே’ படத்தில் அஜ்மல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து 13 ஆண்டுகள் கழித்து மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ளார். அஞ்சாதே படத்தில் நடித்தற்காக அஜ்மல் அந்தாண்டுக்கான சிறந்த துணை நடிகருக்கான ஃப்லிம்பேர் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web