மீண்டும் நயன்தாராவுடன் இணைந்துள்ள அஜ்மல்..!

 
நயன்தாரா மற்றும் அஜ்மல்
நெற்றிக்கண் படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுக்களை பெற்ற அஜ்மல் அமீர், அடுத்ததாக நயன்தாரா நடித்து வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் அஞ்சாதே படத்தின் மூலம் அறிமுகமான அஜ்மல் அமீர், அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான ஃப்லிம்பேர் விருதை வென்றார். அதை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

எனினும் ‘கோ’ படத்தில் ஜீவாவுடன் இணைந்து அவர் நடித்த வலுவான கதாபாத்திரம் பாராட்டுக்களை பெற்றது. மீண்டும் இரண்டாவது முறையாக சிறந்த துணை நடிகருக்கான ஃப்லிம்பேர் விருதை கோ படத்துக்காக பெற்றார் அஜ்மல்.

ஆனால் அவர் ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் தமிழில் படுதோல்வி அடைந்தன. நீண்ட இடைவேளைக்கு பின்பு அவர் நடித்துள்ள படம் தான் நெற்றிக்கண். படத்தில் சைக்கோ வில்லனாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் மீண்டும் நயன் தாராவுடன் ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளார். பிரேமம் புகழ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் அடுத்த படத்தில் ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் முதல் ஷெட்யூல் முடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் இதற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. அப்போது அஜ்மல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விரைவில் இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web