பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த அகிலனுக்கு டும் டும் டும்..! 

 
1

தமிழ் சீரியலிலே அதிகமான முறை ட்ரெண்டிங்கில் இடம் பெற்ற சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் தான். டிஎன்ஏ டெஸ்ட் என்ற ஒன்றை மைய புள்ளியாக வைத்து இந்த சீரியல் நகர்ந்து வந்தாலும் இதற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். 

Akhilan

தொடர்ச்சியாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் பாரதியின் தம்பி அகிலன் கேரக்டரில் நடித்து வந்தவர்தான் அகிலன். ஆனால் இவர் பாதியில் சீரியலை விட்டு நிறுத்திவிட்டு சினிமாவில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் விஷாலின் தங்கையை காதலித்த நபராக இவர் நடித்திருந்தார். சினிமாவில் இவர் அடுத்தடுத்து வெற்றி பெறுவார் என்று ரசிகர்களும் கூறி வந்தனர். அதே நேரத்தில் அதிகமான திரைப்படங்களில் அவர் காணப்படவில்லை. இந்த நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அகிலன் தற்போது தனது காதலியான அட்ஷயா முரளிதரனை திருமணம் செய்து அவருடன் எடுத்த திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியல் நடிகர்கள் மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

From Around the web