முகமூடி அணிந்து ரிவ்யூ கேட்ட நடிகர் அக்சய் குமார்..!

 
1

ஹவுஸ்புல் 5 படம் ஜூன் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.ஹவுஸ்புல் 5 படம் கடந்த 2 நாட்களில் ரூ. 50 கோடி வசூலை தாண்டியது. இப்படம் முதல் நாளில் ரூ. 24 கோடியும், இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட ரூ. 30 கோடியும் வசூலித்துள்ளது.

இந்நிலையில், ஹவுஸ்புல் 5 படம் எப்படி இருக்கிறது என திரையரங்க வாசலில் நடிகர் அக்சய் குமார் முகமூடி அணிந்து ரிவ்யூ கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவரை முகமூடி அணிந்திருந்ததால் ரசிகர்கள் யாரும் இவரை அடையாளம் காணவில்லை. யாரோ சில யூடியூபர்கள் முகமூடி அணிந்து விமர்சனம் கேட்கின்றனர் என நினைத்துக் கொண்டு சிலர் படத்தை பாராட்டியும் சிலர் அவர்களது விருப்பதையும் கூறி உள்ளனர். ஒரு சிலர் அக்சய் குமார் வாய்ஸ் போலவே இருக்கே என்று சந்தேகத்துடனே செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

From Around the web