முந்தி கொண்ட அக்‌ஷய் குமார்- பின்வாங்கிய சல்மான் கான்..!

 
அக்‌ஷய் குமார் மற்றும் சல்மான் கான்

இந்தாண்டு தீபாவளிக்கு அக்‌ஷய் குமார் நடித்துள்ள ‘சூர்யவன்ஷி’ படம் வெளிவருவதால், சல்மான் கான் தனது படத்தை வெளியீடு செய்யும் முயற்சியில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் ஆக்‌ஷன் இயக்குநரான ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சூரியவன்ஷி’. இந்த படத்தில் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து கடந்த ஆண்டிலிருந்தே வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கொரோனா பிரச்னையால் அது தாமதமாகி வருகிறது.

நேற்று இந்த படம் திரைக்கு வந்துள்ளது. அதேநாளில் சல்மான் கான் நடிக்கும் ‘ ஆந்திம் தி ஃபைனல் ட்ரூத்’ திரைப்பட வெளியிட முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சூர்யவன்ஷி படம் வெளிவருவதால், இந்த படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் 'சூர்யவன்ஷி' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வண்ணம் ரோஹித் ஷெட்டியும், கத்ரீனா கைஃபும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web