அதற்குள் அடுத்த படத்தை இயக்கிய முடித்துள்ள ஏ.எல். விஜய்- என்ன ஸ்பீடு...?

 
ஏ.எல். விஜய்

கங்கனா ரணாவத் நடித்துள்ள தலைவி படம் இன்னும் வெளிவராத நிலையில், அதற்குள் தனது அடுத்த படத்தை எடுத்து முடித்துவிட்டார் இயக்குநர் ஏ.எல். விஜய்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘தலைவி’. இந்த படத்தில் கங்கனா ஜெயலலிதாவாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இயக்குநர் ஏ.எல். விஜய் தனது அடுத்த படத்தை எடுத்து முடித்துள்ளார். நான்கு பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ் மற்றும் ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தில் விஷ்வக் சென் என்பவர் நாயகனாக நடித்துள்ளார். ஓடிடி-யில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ‘அக்டோபர் 31 லேடீஸ் நைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்னும் எந்த ஓடிடி தளத்தில் இப்படம் வெளிவருகிறது என்பதை படக்குழு இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதும், படத்தின் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web