உலகத்துக்கு முதல்முறையாக மனைவி மற்றும் மகனை அறிமுகம் செய்து வைத்த ஏ.எல். விஜய்..!

 
உலகத்துக்கு முதல்முறையாக மனைவி மற்றும் மகனை அறிமுகம் செய்து வைத்த ஏ.எல். விஜய்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஏ.எல். விஜய் உலகத்துக்கு முதல்முறையாக மனைவி மற்றும் மகனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ஏ.எல். விஜய் உருவாக்கியுள்ள படம் ‘தலைவி’. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ள நிலையில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாகவும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் கடந்த வாரம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஏ.எல். விஜய். அதை தொடர்ந்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். அடுத்த சில மாதங்களில் நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்று சட்டப்படி பிரிந்தனர்.

பிறகு பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் ஏ.எல். விஜய். அவர்களுக்கு கடந்தாண்டு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அவர் தலைவி படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.

இதனால் மகனை அவர் வெளியுலகத்திற்கு காட்டவில்லை. இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகனுடன் ஏ.எல்.விஜய் இருக்கும் குடும்பப் புகைப்படம் முதல்முறையாக வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் பலர் ஏ.எல்.விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

From Around the web