மொத்தத்தில், இந்த ‘டீன்ஸ்’ குழந்தைகளோடு பயணிக்கலாம்  - டீன்ஸ் விமர்சனம்..! 

 
1

சிறுவர்கள் சிலர் ஒன்றுக்கூடி பெரியவர்கள் போல் அனைத்து விசயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிறுமி ஒருவர் தனது பாட்டி வசிக்கும் கிராமத்தின் அழகு மற்றும் அங்கு பேய் இருப்பதாக சொல்கிறார். அந்த பேயை நேரில் சென்று பார்க்கலாம், என்று முடிவு செய்யும் சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள். 

சாலையில் நடக்கும் போராட்டத்தால் சிறுவர்கள் செல்லும் பேருந்து தொடர்ந்து பயணிக்க முடியாமல் போக, சிறுவர்கள் காட்டுப்பாதையில் நடந்து செல்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவர் திடீரென்று காணாமல் போக, அவரை தேடும் போது ஒவ்வொருவராக மாயமாகிறார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் அங்கும் இங்குமாக சிறுவர்கள் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம் ஒவ்வொருவராக மாயமாவது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இவர்களின் இந்த திடீர் மாயத்தின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

அறிவியல் உலகத்தின் அதிசயங்கள் பற்றி சிவர்கள் பேசுவது, மலைபாம்பின் வயிற்றை கிழிப்பது,அறிவியலைப் பற்றி சிறுவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கதையில் வலியுறுத்தியிருப்பது, சிறுவர்களின் பெயர்கள் மற்றும் அதன் குணாதியசங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பாடல் ஆகியவை படத்தை ரசிக்க வைத்தாலும், குறிப்பிட்ட ஒரே இடத்தில் சிறுவர்களை ஓட வைத்திருப்பது, யோகி பாபுவை தேவையில்லாமல் திணித்திருப்பது, மேக்கிங் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது, போன்றவை படத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.

From Around the web