நம் ராஜதந்திரம் எல்லாம் வீணாகி போனதே - கவுன்சிலர் எதிராக காயை நகர்த்திய பாக்கியா..!

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் அமைச்சருடன் சந்திக்க வைப்பதாக சொன்ன கட்சி ஆள் அவசர வேலையாக வெளியில் சென்று விடுகிறார். இதனால் பாக்யா என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறாள். ஆனாலும் எப்படியாவது அமைச்சரை பார்த்து பேச வேண்டும் என முயற்சி செய்கிறாள். அப்போது சாப்பாட்டை எல்லாம் எடுத்துக்கொண்டு போக, கவுன்சிலர் தடுத்து விடுகிறான். சமைக்கிறதோட உங்க வேலை முடிஞ்சுருச்சு. பரிமாறுறது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் என சொல்லி கட்சி ஆட்களை கூப்பிடுகிறான்.
இதனிடையில் செழியன் வெளியில் எடுப்பதற்காக வக்கீலிடம் பேசி கொண்டிருக்கிறான் கோபி. அப்போது ஈஸ்வரி வந்து, நீ உன் பையனை வெளியில் எடுக்க அவ்வளவு போராடுற. ஆனால் பாக்யா சமையல் ஆர்டர் பார்க்க போயிருக்கா. அவளுக்கு இந்த குடும்பத்து மேல அக்கறையே இல்லைடா என சொல்கிறாள்.
இதனிடையில் பாக்யா வாசலிலே நிற்க, அவளுக்கு உதவுவதாக சொன்ன கட்சி ஆள் வருகிறான். நான் அமைச்சர் கிட்ட பேசிட்டு வர்றேன் என சொல்லி உள்ளே போகிறாள். அங்கு அமைச்சர் சாப்பாடு சூப்பராக இருப்பதாக சொல்ல, சமையல் செஞ்சவங்களை கூப்பிடுறேன் என்கிறான். மினிஸ்டரும் கூப்பிடு என சொல்ல, கவுன்சிலர் இடையில் புகுந்து நீங்க உடனே கிளம்பனும் தலைவரே. சமையல் ஆளுங்களை எல்லாம் பார்க்கனுமா என்கிறான்.
இதையெல்லாம் கவனிக்கும் பாக்யா அமைச்சருக்காக செய்த ஸ்வீட்டை எடுத்துட்டு வந்து உள்ளே நுழைந்து விடுகிறாள். அமைச்சரிடம் அதை கொடுத்து கட்சி மாநாட்டில், எம்எல்ஏ வீட்டு பங்ஷனில் சமைத்த விஷயத்தை சொல்கிறாள் பாக்யா. இதனைக்கேட்டு மினிஸ்டர் பாராட்ட, நான் வைச்சு இருக்க ஹோட்டல்ல உங்க கட்சி ஆளால பிரச்சனை சார் என்கிறாள். கவுன்சிலர் இடையில் புகுந்து தடுக்க பார்க்க, இரு அவுங்க முழுசா சொல்லட்டும் என கூறி விடுகிறார் அமைச்சர்.
இதனையடுத்து பாக்யா நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்கிறாள். எந்த பையனுக்கு சார் அம்மாவை பத்தி பேசுனா கோபம் வராது. அதான் என் பையன் கோபத்துல அடிச்சுட்டான். இப்போ ஜெயில்ல இருக்கான். இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்ல வந்தப்ப எனக்கு கொலை மிரட்டல் கூட விடுத்தாரு என்கிறாள். உடனே கவுன்சிலர் இந்தம்மா பொய் சொல்றாங்க என்கிறான். அப்போது பாக்யா அவன் வந்து மிரட்டிய சமயத்தில் எடுத்த வீடியோவை அமைச்சரிடம் போட்டு காமித்து ஷாக் கொட்டுக்கிறாள்.
உடனே கவுன்சிலரை திட்டி விட்டு, உடனே போய் அந்த பையன் மேல கொடுத்த கேஸை வாபஸ் வாங்குற. ஒரு நிமிஷம் கூட இந்த இடத்துல நிக்க கூடாது என சொல்லி அனுப்பி வைக்கிறார். உங்க பையன் நைட்டுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவான்ம்மா பயப்படமா போங்க என சொல்லி அனுப்பி வைக்கிறார்.