விஜய்யை வழியனுப்பி வைத்த லியோ படக்குழு- ஆனால் தொடரும் ஷூட்டிங்..!!

லியோ படத்தில் நடிகர் விஜய் தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அவரை தடபுடலாக படக்குழுவினர் வழி அனுப்பி வைத்துள்ளனர்.
 
leo movie

மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘லியோ. முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கும் நிலையில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூர் அலி கான், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் எஸ்.ஜே. சூர்யா, கதிர், மறைந்த நடிகர் மனோபாலா, பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலம், பிரேம் புகழ் மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு எதுவும் உண்மை நிலவரத்தை வெளியிடவில்லை. 

leo movie crew

ஆரம்பத்தில் காஷ்மீரில் 50 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், தலைக்கோணம் போன்ற பகுதிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் விஜய் தொடர்பான அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

leo movie

இதையடுத்து படக்குழுவினர் தடபுடலாக ஆர்ப்பாட்டம் செய்து அவரை வழியனுப்பி வைத்துள்ளனர். அதற்கு பிறகு மீண்டும் காஷ்மீருக்கு பயணமாகிறது படக்குழு. அங்கு சில பேட்ச்வொர்க்குகள் மற்றும் ரீஷூட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அதில் விஜய் பங்கேற்கப்போவது கிடையாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

From Around the web