மனைவிக்கு தெரிந்தே பிரபல நடிகைக்கு கார் வாங்கி தந்த விஜய்..!! யார் அவர்..!!
நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுக்கு தெரிந்தே, பிரபலமான நடிகை ஒருவருக்கு சொகுசு காரை வாங்கி பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் விஜய், பெருமளவில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டது கிடையாது. ஆனால் சமீப காலமாக அவரைச் சுற்றி பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அவர் தனது அம்மா- அப்பாவை பிரிந்துவிட்டார், விஜய் உடனான கருத்து வேறுபாடு காரணமாக மனைவி சங்கீதா பிரிந்து வாழ்கிறார் என பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அவரை சுற்றி சொல்லப்படுகிறது.
புதியதாக நடிகர் விஜய் வளர்ந்து வரும் நடிகருடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் விஜய் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, அந்த நடிகையை திருமணம் செய்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது. விஜய்யுடன் ‘பைரவா’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தான்.
விரைவில் தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, விஜய் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யவுள்ளார் என்றும் சொல்லப்பட்டன. இந்நிலையில் அண்மையில் கீர்த்தி சுரேஷுக்கு வேண்டி நடிகர் விஜய் புதிய ரக சொகுசுக் காரை வாங்கி பரிசளித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுவும் விஜய் தனது மனைவிக்கு தெரிந்தே தான் அந்த காரை வாங்கி, கீர்த்திக்கு பரிசளித்துள்ளாராம்.
#Vijay secretly Love affair with #KeerthySuresh is going on. He recently gifted her Luxury Car & gifts 🎁. His wife even knows about it but she has no problem with that affair. pic.twitter.com/qxm4I97yvF
— Umair Sandhu (@UmairSandu) March 12, 2023
இந்த தகவலை திரைப்பட சென்சார் குழுவைச் சேர்ந்த உமைர் சந்து என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனால் இவருடைய போஸ்ட்டுக்கு கீழ் கமெண்டு செய்துள்ள பலரும், இது முற்றிலும் ஆதாரமற்றது என்றும், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். தவிர, கீர்த்தி சுரேஷ் கல்லூரிக் காலம் முதலே ஒருவரை காதலித்து வருகிறார், குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்களுக்கு தன் காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதனால் இந்த பதிவை நீக்குக என்றும் கமெண்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.