பெண் உயிரிழப்பு : கொலை முயற்சி வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் திடீர் கைது
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 படம் வசூலில் இமாலய சாதனையை படைத்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா எனும் தியேட்டருக்கு வந்தார்.
எந்தவித முன்னறிவிப்புமின்றி வந்த அல்லு அர்ஜூனைக் காண கூட்டம் அலைமோதியது. இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்கிற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து. அத்தியேட்டரின் உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் மீதும் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜூன் அறிவித்தார். மேலும், படக்குழுவினர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவுவார்கள் என்று அறிவித்தார். அதோடு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் நடிகர் அல்லு அர்ஜூன் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் இன்று நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
BIG BREAKING:#AlluArjun arrested in theatre stampede case!#Hyderabad Task Force Police arrested him under multiple sections!#Pushpa2 #Pushpa2TheRule #AndhraPradesh #RevanthReddy #ChandrababuNaidu #PawanKalyan #NarendraModi #RahulGandhi #RamCharan #Chiranjeevi #Telanagana pic.twitter.com/LdK5CuX4zA
— Pakka Telugu Media (@pakkatelugunewz) December 13, 2024