புஷ்பா படத்தின் கெட்-அப்பால் வசமாக சிக்கிக்கொண்ட அல்லு அர்ஜுன்..!

 
அல்லு அர்ஜுன்

புஷ்பா படத்தை தொடர்ந்து வேறு புதிய படங்களில் நடிக்க அல்லு அர்ஜுன் நடிக்க முடிவு செய்துள்ளது படக்குழுவினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

தெலுங்கு நடிகர்கள் பெரும்பாலானோர் கெட்-அப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஒரே நேரத்தில் பல படங்களில் அவர் நடிப்பது வழக்கம். அதனால் ஒரே மாதிரியான தோற்றத்துடன் தான் பெரும்பாலும் இருப்பார்கள்.

ஆனால் இந்த டிரெண்டை மாற்றும் விதமாக புஷ்பா படத்தில் சொந்தமாக முடி வளர்த்து, தாடி வைத்து மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இது அவருக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக புஷ்பா படம் உருவான போது அதை ஒரே பாகமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் படத்தின் முதல் பார்வை கிளம்ப்ஸ் வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படம் கே.ஜி.எஃப் போல இரண்டு பாகங்களாக தயாரிக்க முடிவானது.

தற்போது முதல் பாகத்துக்கான ஷூட்டிங் முடிவடையவுள்ளது. இந்தாண்டுக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதை தொடர்ந்து வேறு சில படங்களில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்துள்ளார். ஆனால் இது படக்குழுவுக்கு பிரச்னையாகியுள்ளது.

காரணமாக சொந்தமாக கெட்-அப்பை மாற்றி புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இரண்டாம் பாகத்தை ஆரம்பித்திட இயக்குநர் முடிவு செய்துள்ளார். ஆனால் அல்லு அர்ஜுன் முடிவு வேறு மாதிரியாக உள்ளது.

தெலுங்கு நடிகர்கள் பெரும்பாலானோர் கெட்-அப்புக்கான முக்கியத்துவம் குறித்து அறியாதவர்கள். அதனால் அல்லு அர்ஜுனை சமாதானம் செய்வது படக்குழுவுக்கு பெரும் தலைவலியாக உருவாகியுள்ளது.
 

From Around the web