விஜய் நிராகரித்த கதையை ஓ.கே செய்த அல்லு அர்ஜுன்..!
 

 
ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் அல்லு அர்ஜுன்

தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ் பாபுவை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி இயக்குநராக இருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார். தமிழில் வெளியான ரமணா படத்தை அவரே தெலுங்கிலும் இயக்கினார். ஸ்டாலின் என்ற பெயரில் வெளியான படத்தில் சிரஞ்சீவி, ஜோதிகா நடித்திருந்தனர்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மகேஷ் பாபு நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான ’ஸ்பைடர்’ படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார். இது பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால் கொஞ்ச காலத்திற்கு அவர் தெலுங்கு திரையுலகம் பக்கம் போகாமல் இருந்தார். 

தற்போது அந்த முடிவை அவர் மாற்றியுள்ளதாக தெரிகிறது. சர்கார் படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யிடம் அவர் கதை சொல்லி இருந்தார். ஆனால் அந்த கதை விஜய்க்கு பிடிக்கவில்லை. அதே கதையை அல்லு அர்ஜுனுக்கு சொல்லி ஒகே செய்துவிட்டாராம் ஏ.ஆர். முருகதாஸ்.

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் முதல் பாகத்தை முடித்துவிட்டார். இப்படம் வரும் டிசம்பருக்கு திரைக்கு வருகிறது. அதற்கு பிறகு கொரொட்டாலா சிவா, பிரசாந்த் நீல் போன்ற இயக்குநர்களுடன் பேசி வருகிறார். இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாஸும் இணைந்துள்ளார்.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு முன்பாக, இவர்கள் மூவரில் ஒருவருடைய இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக புஷ்பா முதல் பாகம் வெளியீட்டு வரை காத்திருக்க வேண்டும் என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

From Around the web