அப்ளாஸை அள்ளும் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகாவின் ‘ஸ்ரீவள்ளி’ பாடல்..!

 
புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடல்

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்ரீவள்ளி’ பாடல் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.

தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள புஷ்பா பார்ட்- 01 படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது துவங்கிவிட்டன. அதன்படி ஏற்கனவே புஷ்பா படத்தின் முதல் பாடலான ’டக்கோ டக்கோ மேஹா’ பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

இதை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஸ்ரீவள்ளி’ அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரக் கடத்தலில் ஈடுபடும் லாரி டிரைவராக நடித்துள்ளார். ஃபகத் பாசில் அவரை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் மிக சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. 
 

From Around the web