அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் அல்லு அர்ஜுன்..!

 
அல்லு அர்ஜுன்

தன்னுடைய பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மீண்டு வந்தார். இந்நிலையில் தன்னிடம் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வேலையாட்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளதாக அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பலருக்கும் முறையான சிகிச்சை மற்றும் வசதி கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் பணியாளர்களுக்காக வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பலரிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
 

From Around the web