புஷ்பா படத்தில் தமிழராக நடிக்கும் அல்லு அர்ஜுன்..? வெடிக்கும் புதிய சர்ச்சை..!

 
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன்

தெலுங்கு சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் ‘புஷ்பா’ படத்தில் கதாநாயகன் அல்லு அர்ஜுன் தமிழராக நடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் திருப்பதி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் நடக்கும் செம்மரக்கட்டை கடத்தல் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் படம்‘புஷ்பா’. சுகுமார் என்பவர் இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் லாரியை ஓட்டும் ஒரு தமிழர் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செம்மரக் கட்டை கடத்தல் சம்பவங்களில் அதிகம் ஈடுபடுவது தமிழர்கள் என்று ஆந்திர போலீசார் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் தமிழராக நடிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படம் அல்லு அர்ஜுனின் திரைவாழ்க்கைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதனால் துணிந்தே சர்ச்சை மிகுந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து படக்குழு படத்தின் கதையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுதொடர்பான விளக்கத்தை விரைவில் புஷ்பா படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web