எலும்பு முறிவு சிகிச்சைக்கு பின் ஆல்யா மானசா தந்த ’அதிர்ச்சி’..!!

சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்த வெகு சில நாட்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுவிட்டார் ஆல்யா மானசா. அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் அவர் பெரிய ஒரு ஸ்டாராக வலம் வருகிறார். 
 
ஆல்யா மானசா

எலும்பு முறிவு சிகிச்சைக்கு பின், சமூகவலைதளத்தில் நடிகை ஆல்யா மானசா பதிவிட்டுள்ள வீடியோ, நெட்டிசன்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும், இன்றும் சின்னத்திரையில் முன்னணி நடிகை என்றால் அது ஆல்யா மானசா தான். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தாலும், சமூகவலைதளங்கள் வாயிலாக இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.

இவர் இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களில் போடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் லைக்ஸ் மற்றும் ஷேரிங் அள்ளும். அண்மையில் இவருக்கு எதிர்பாராத விதமாக காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுதொடர்பான தகவலை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்ட அடுத்த நொடி, பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறினர்.

தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் தொடர்களில் நடிக்க துவங்கியுள்ள ஆல்யா, இன்ஸ்டாவில் புதியதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வழக்கம் போல அழகாகவும் அம்சமாகவும் நடனமாடி தான் நலமாகிவிட்டதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர், ஆல்யாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் அவர் பல உயரங்களை அடைய வேண்டும் எனவும் கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.
 

From Around the web