நான் ஈ பட நடிகைக்கு இப்படி ஒரு நிலையா ? சோகத்தில் ரசிகர்கள்..!!

 
1

பிரபல தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி மிர்ச்சி, ஸ்ரீரஸ்து சுபமஸ்து, நான் ஈ,அனுஷ்காவின் ருத்ரமாதேவி, ஜெய் லவ குசா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தற்போது அவர் தான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:


4 மாதங்களுக்கு முன்பு என் மார்பில் சிறு கட்டி இருந்ததை உணர்ந்தேன். இனி என் வாழ்க்கை பழையபடி இருக்காது என்று அப்பொழுதே உணர்ந்தேன். 18 ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மா கொடிய நோயால் உயிரிழந்தார். அதில் இருந்து பயத்தில் வாழ்ந்தேன். 

உடனே அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றிவிட்டார்கள். ஆனால் அது அத்துடன் முடியவில்லை. என் வாழ்க்கை முழுவதும் புற்றுநோய் மீண்டும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதற்காக சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது.

இதுவரை 9 முறை கீமோதெரபி செய்துவிட்டனர். இன்னும் 7 முறை செய்ய வேண்டியிருக்கிறது.

நானே எனக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளேன்.  இந்த நோய் என் வாழ்க்கையை ஆக்கிரமிக்க விடமாட்டேன். புன்னகையுடன் அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவேன்.  நான் மீண்டும் திரையில் சிறப்பாகவும் வலிமையாகவும் வருவேன்.  நான் தைரியமாக இருந்து இந்த நோயை வெல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

From Around the web