நீச்சல் உடையில் கெத்து காட்டும் பிரபல நடிகை..!!
தென்னிந்திய சினிமாக்களில் பெரும்பாலும் குடும்பப் பின்னணி கொண்ட கதைகளில் நடித்து பிரபல நடிகை, நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். அதை தொடர்ந்து ‘மைனா’, ‘தெய்வதிருமகள்’, ‘வேட்டை’, ’தலைவா’ போன்ற படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். மேலும் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துகொண்ட அவர், 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். அதை தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடிக்கத் தொடங்கிய அவர், ‘ராட்சசன்’, ‘ஆடை’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘கடாவர்’ போன்ற படங்களில் மீண்டும் முன்னணியாக நடிகையாக உயர்ந்தார்.
தற்போது அவர் இந்தியில் போலா, மலையாளத்தில் திவ்ஜா மற்றும் ஆடு ஜீவிதம், தமிழில் அதோ அந்த பறவை போல ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் இவர் நடித்துள்ள ‘போலா’ படம் வரும் 30-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் வெளியான ‘கைதி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.
அண்மையில் அமலா பால் காட்டுப் பகுதியில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட வீடியோக்களை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. அந்த வீடியோவை பதிவிட்ட சில வாரங்களில், கடல் பகுதியில் பிகினி அணிந்து நீராடும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவுக்கும் லட்சக்கணக்கில் பார்வை குவிந்து வருகின்றன. பெரும்பாலும் குடும்பப் பின்னணி கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்த அமலா பால், படு கவிர்ச்சியாக உடை அணிந்து வெளியிட்டுள்ள இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.