அமரன் படக்குழுவின் சம்பள விவரங்கள் வெளியீடு..!

 
1

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் படம் தான், அமரன். 2014ஆம் ஆண்டு காஷ்மீர், புல்வாமா தாக்குதலில் மக்களை காக்க தன்னுயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவர் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அமரன் படத்தில், ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்க, அவருக்கு மனைவியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரக்டரில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். 
 
அமரன் படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து இப்படத்தில் நடித்தவர்கள் குறித்தும், அவர்கள் இதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கின்றனர் குறித்தும் இங்கு பார்ப்போம். 

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக அவர், சுமார் ரூ.30 கோடி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் படங்களில் நடிக்க, அவர் ரூ.15-20 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்ததாகவும் இப்போது அவர் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாம் இடத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ரூ. 6 கோடி சம்பளம் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

இந்த படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவி ரூ. 2.5 கோடி முதல் 3 கோடி வரை சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பள வேறுபாட்டை பார்த்தவர்கள், ஏன் இவ்வளவு பெரிய கேப் என கேட்டு வருகின்றனர்.

From Around the web