ஹாலிவுட்டின் பாரம்பரிய மிக்க எம்.ஜி.எம் நிறுவனத்தை வாங்கியது அமேசான்..!

 
எம்.ஜி.எம் நிறுவனத்தை வாங்கிய அமேசான்

ஹாலிவுட் சினிமா துறையில் மிகப்பெரிய ஆதிக்கம் கொண்ட எம்.ஜி.எம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து திரைத்துறைகளின் பழம்பெரும் படத் தயாரிப்பு நிறுவனம் மெட்ரோ கோல்டுவின் மேயர். சுருக்கமான இது எம்.ஜி.எம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்நிறுவனம் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது.

இதுதவிர உலகளவில் வரவேற்பு பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்கள், சில்வெஸ்டர் ஸ்டாலின் நடித்த ராக்கி வரிசைப் படங்கள், பேஸிக் இன்ஸ்ட்டிங்கிட், ரோபோ காப் போன்ற படங்களை தயாரித்து மிகப்பெரிய வசூல் ஈட்டியுள்ளது. இதன்மூலம் உலகின் மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும் எம்.ஜி.எம் விளங்குகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்நிறுவனம் பிரபல ஆன்லைன் வணிக வர்த்தக நிறுவனமான அமேசான் வாங்கிவிட்டதாக கூறப்பட்டு வந்தது. எனினும், இதுதொடர்பான தகவல்களை இருதரப்பினருமே உறுதி செய்யாமல் இருந்து வந்தன. 

தற்போது எம்.ஜி.எம் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு இடையில் நடந்துள்ள ஒப்பந்தம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்மூலம் எம்.ஜி.எம் நிறுவனத்தை  8.45 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய ஓடிடி தளம் என்கிற பெயரை அமேசானின் பிரைம் ஓ.டி.டி தளம் பெறவுள்ளது.

அதற்கு காரணம் எம்.ஜி.எம் நிறுவனத்தை அமேசான் வாங்கிவிட்டதால், அந்நிறுவனம் தயாரித்த அனைத்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிரைம் வீடியோவில் பார்க்க முடியும். இதன்மூலம் அமேசான் நிறுவனம் மிகப்பெரிய வருவாயை ஈட்டும் என்கிறார்கள் வணிகத்துறை ஆய்வாளர்கள். 

From Around the web