ஹாலிவுட் பட ரீமேக்கில் நடிக்கும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன்..!

 
ஹாலிவுட் பட ரீமேக்கில் நடிக்கும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன்..!

ஹாலிவுட் சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற ‘தி இண்டர்ன்’ படத்தின் பாலிவுட் ரீமேக்கில் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு நேன்ஸி மேயர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட்டில் வெளியான படம் ‘தி இண்டர்ன்’. ஆஸ்கர் விருது வென்ற நடிகர்களான ராபர்ட் டி நீரோ மற்றும் ஏன்னி ஹத்தாவே இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அரசாங்க பணியில் இருந்து ஓய்வு பெற்ற 70 வயது முதியவர் ஒரு ஃபேஷன் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியில் சேருகிறார். அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் ‘தி இண்டர்ன்’ படத்தின் கதை. இதில் ஓய்வு பெற்ற முதியவர் வேடத்தில் ராபர்ட் டி நீரோ மற்றும் ஃபேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் வேடத்தில் ஏன்னி ஹத்தாவே நடித்திருந்தனர்.

ஹாலிவுட்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, 194 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த படம் வசூலித்தது. தற்போது இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ராபர்ட் டீ நீரோ கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும், ஏன்னி ஹத்தாவே வேடத்தில் தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர்.

இதுகுறித்த தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உறுதிசெய்துள்ள நடிகை தீபிகா படுகோன், 'மீண்டும் எனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் இணைந்து நடிப்பதில் கவுரவம் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக இவர் அமிதாப் பச்சன் உடன் ‘பிக்கு’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை சுனிர் கெட்டர்பால் என்பவருடன் இணைந்து தீபிகா படுகோன் சொந்தமாக தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web