மீண்டும் பால்கி படத்தில் நடிக்கும் அமிதாப்- ஆனால் ஹீரோ துல்கர் சல்மான்..!

 
துல்கர் சல்மான் மற்றும் அமிதாப் பச்சன்
பால்கி இயக்கத்தில் இந்தியில் உருவாகும் துல்கர் சல்மான் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ள விபரம் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தரச் சோழர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அமிதாப் பச்சம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால், படத்தில் நடிக்காமல் விலகிவிட்டார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார்.

இந்த கால்ஷீட்டை தற்போது பால்கிக்கு அவர் வழங்கியுள்ளார். பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் பால்கி ஏற்கனவே அமிதாப் பச்சன் நடிப்பில் 5 படங்களை இயக்கியுள்ளார். அதில் 3 படங்களில் அவர் தான் கதாநாயகன்.

இந்நிலையில் பால்கி மற்றும் அமிதாப் பச்சன் கூட்டணியில் ஆறாவதாக ஒரு படம் உருவாகிறது. இதில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். சைக்காலிஜக்கல் த்ரில்லர் படமாக இது தயாராகிறது. சன்னி தியோல், பூஜா பட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் அடுத்தாண்டு துவங்கவுள்ளன. இப்படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து, அமிதாப் இல்லாமல் பால்கிக்கி படம் எடுக்க தெரியாது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

From Around the web