மீண்டும் காதலில் விழுந்த எமி ஜாக்சன் ?நாக்கு நாக்கை உரசி போட்டோ வெளியீடு 

 
1

‘மதராசப்பட்டினம்‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.அதன்பிறகு  ‘ஐ, கெத்து, தெறி, தங்கமகன்‘ என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ‘அச்சம் என்பது இல்லையே‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். எமி ஜாக்சன் இதற்கு முன்பு ஜார்ஜ் பனயட்டியோ என்பவரைக் காதலித்து வந்தார். அவருடன் திருமண நிச்சயம் மட்டும் நடந்தது, ஆனால், திருமணம் நடக்கவில்லை. அவர் மூலமாக ஆண் குழந்தை ஒன்றிற்கும் தாயானார். அதன்பின் இருவரும் பிரிந்தனர். தற்போது எமியின் ஆண்குழந்தைக்கு 4 வயதாகிறது.

1

இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக ஆங்கில நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரைக் எமி காதலித்து வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு அந்தப் புதிய காதலருடன் முத்தமிட்ட  புகைப்படங்களையும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு ஹாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தங்களின் காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில், நடிகை எமி ஜாக்சன் ஒரு ஸ்டெப் மேலே சென்று காதலரின் நாக்குடன் தனது நாக்கு உரசும் செம ரொமான்டிக்கான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

புது காதல் ஜோடிக்கு அவர்களுடைய நண்பர்கள் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

From Around the web