பிரபல நடிகையை கடவுளாக வழிபட்ட தீவிர ரசிகர்..! மிரண்டு போய் நடிகை கொடுத்த அட்வைஸ்..

 

வெள்ளித்திரையில் இளம் நடிகையாக இருக்கும், யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மாடலிங் துறையில் கொண்ட ஆர்வத்தால் சினிமாவிற்குள் வந்த இவர், கார்த்திக் நரேனின் ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

YashikaAannand

அதன்பிறகு   ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’,  ‘ஜாம்பி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். திரைப்படங்களை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலம் யாஷிகாவிற்கு கிடைத்தது. இதை வைத்துக் கொண்டு மீண்டும் சினிமாவில் முயற்சி செய்து வந்தார். அதற்குள் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பின் நலம்பெற்றார்.  

அந்தவகையில் யாஷிகாவின் தீவிர ரசிகர் ஒருவர், யாஷிகாவின் புகைப்படத்தை எடுத்து வைத்து அவரை சாமியாக பாவித்து தினமும் வழிபட்டு வந்துள்ளார் . அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார்.

1

இதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த யாஷிகா, ‘நானும் மனுஷன் தானே. நாம் எல்லாரும் அன்பை பகிருவோம். நமக்கெல்லாம் ஒரு கடவுள் தான் இருக்கிறார். நாம் அவரை மட்டும் தான் பயபக்தியுடன் வழிபட வேண்டும்’ என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

From Around the web