அன்பே ஆருயிரே பட நடிகைக்கு விரைவில் திருமணம்... மாப்பிள்ளை யாரு தெரியுமா ? 

 
1

நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிலா. மீரா சோப்ர என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடுத்து மருதமலை & லீ போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இப்போது, தமிழ்ப் படங்களைக் காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா ஆகியோர் இவரது சகோதரிகள். இவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மீராவுக்கு எப்போது திருமணம் எனவும் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார் மீரா. நாற்பது வயதில் திருமணம் செய்யப் போவதாக மீரா குறித்து செய்திகள் வலம் வந்தது.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கும் மீரா சோப்ரா, நீங்கள் கேள்விப்பட்ட செய்திகள் சரிதான். எனக்கு விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்றார்.

கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த மும்பை தொழிலதிபரான ரஷீத் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஜெய்ப்பூர் சாலையில் உள்ள ரிசார்ட்டில் வரும் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். திருமணத் தகவலை மீரா சோப்ரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

From Around the web