ரசிகர்களின் டிரம்ஸ் ஆட்டத்துடன் ரிலீசான அந்தகன்! வைரல் வீடியோ..!

 
1
பிரசாந்துக்கு ஐம்பதாவது திரைப்படமாக அமைந்துள்ளது அந்தகன். இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த், ஊர்வசி, பெசண்ட் நகர் ரவி, கே.எஸ். ரவிக்குமார், மனோபாலா, யோகி பாபு, சமுத்திரக் கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க க்ரைம், த்ரில்லர், சஸ்பென்ஸ் படமாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் ஆரம்பத்திலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் படத்தின் கிளைமாக்ஸ் வரைக்கும் சலிப்பு தட்டாமல் இருந்தது தான் இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம்.

தனது மகனின் ஐம்பதாவது படத்தை மாபெரும் வெற்றி படமாக அமைத்திட வேண்டும் என்ற நோக்கத்திலேயே தியாகராஜன் கடும் போட்டிகளுக்கு மத்தியில் அந்தாதூன் படத்தின் உரிமையை வாங்கி ரீமேக் செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்தகன் படத்தினை பார்க்க வந்த ரசிகர்களுடன் பிரசாந்த் மற்றும் படக்குழுவினரும் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு வந்துள்ளார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் அந்தகன் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் பிரசாந்த் பேனருக்கு பால் அபிஷேகம் செய்துள்ளதோடு தியேட்டர் வாசலில் ஆயிரம் வாலா வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர். அதேபோல  டிரம்ஸ் வாசித்து ஆட்டமும் போட்டுள்ளார்கள்.


 


 

From Around the web