பிரபல நடன இயக்குநர் இயக்கும் படத்தின் ஆண்ட்ரியா..!

 
பாபி ஆண்டனி, ஆண்ட்ரியா மற்றும் சுஜாதா விஜயகுமார்

தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குநர் பாபி ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மைனா படத்தில் இடம்பெற்ற ”ஜிங்கிச்சுக்கா..” என்ற பாடலுக்கு நடனம் அமைத்தன் மூலம் பிரபலமானவர் பாபி ஆண்டனி. தமிழ் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்.

தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். அந்த படத்தை நடிகர் ஜெயம் ரவியின் மாமியாரும், பிரபல சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார். நடிகர் அருண் விஜய்யின் சொந்த சகோதிரி.

பாபி ஆண்டனி இயக்கும் படத்தில் ஆண்ட்ரியாவுடன் மலையாள நடிகை ஆஷா சரத், காளிவெங்கட், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ரான் ஈதன் யோகன் என்பவர் இசையமைக்கிறார். இது முற்றிலும் கதாநாயகியை மையப்படுத்திய படமாக தயாராகிறது.

From Around the web