மீண்டும் வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா..!

 
ஆண்ட்ரியா மற்றும் வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா நடிக்கவுள்ள விபரம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களில் நடித்து கவனமீர்த்து வருகிறார் ஆண்ட்ரியா. தற்போது அவர் நடித்து வரும் அரண்மனை, நோ எண்ட்ரி, வட்டம், மாளிகை, கா, பிசாசு- 2 ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

இதில் அரண்மனை, நோ எண்ட்ரி, வட்டம் ஆகிய படங்களுக்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து முடிந்துவிட்டன. இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளன. தற்போது மாளிகை, கா, பிசாசு- 2, படங்களுக்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றன.

இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் 16 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க பெண்ணை மையப்படுத்திய படமாக இது தயாராகவுள்ளது. இந்த படத்துடன் லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’ திரைப்படத்தையும் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வருகிறார்.

From Around the web