கமல், நயன்தாரா படத்தில் இணையும் ஆண்ட்ரியா..??

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
andrea

நடிகர் கமல்ஹாசன் தற்போதி ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனுடைய படப்பிடிப்பு தென்னாப்ரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது ஷூட்டிங்கிற்கு சென்று கமல்ஹாசன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

இதற்கடுத்து கமல்ஹாசன் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வெற்றிமாறன், பா. ரஞ்சித் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இயக்குநர்களும் கமலுடன் இணைந்து படம் பண்ணுவதை உறுதி செய்துள்ளனர்.

இந்த வரிசையில் மணிரத்னம் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் பேனரில் தயாரிக்கிறார்.

இந்தியன் 2 படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் தான் கமல்ஹாசன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அது உறுதியாகும் பட்சத்தில், கமல்ஹாசன் மற்றும் நயன்தாரா இணைவது இதுவே முதல்முறையாகும்.

அவர் மட்டுமின்றி மற்றொரு கதாநாயகியாக ஆண்டரியாவை நடிக்கவைக்க படக்குழு முயற்சித்து வருகிறது. ஏற்கனவே விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் ஆகிய படங்களில் கமலுடன் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ளார். மணிரத்னம் படத்தில ஆண்ட்ரியாவின் வருகை உறுதியானால், இது கமலுடன் அவர் நடிக்கும் 4-வது படமாகும். 
 

From Around the web