கோபப்பட்ட அஜித்... சைக்கிளில் வந்த விஜய்... அடுத்து விக்ரம் என்ன செய்தார் தெரியுமா?

 
கோபப்பட்ட அஜித்... சைக்கிளில் வந்த விஜய்... அடுத்து விக்ரம் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகர்களில் ஒருவரான விக்ரம், புதிய பாணியில் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்து முடித்துள்ளார். அதுகுறித்து விபரங்களை அறியலாம்.

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய தொழிலதிபர்கள்,  சமூக செயற்பாட்டாளர்கள், சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் என பலரும் தங்களுடைய வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

முன்பு எப்போதும் இல்லாத வகையிலான செயல்பாடுகள் இந்தாண்டு நடைபெறும் தேர்தலில் காண முடிகிறது. பிரபலங்கள் பலர் சமூக நலனை கருத்தில் கொண்டும், ஜனநாயக உரிமைக்கு மதிபளிக்கும் வகையிலான செயல்பாடுகளை நேரடியாக செய்கின்றனர். அதற்கு மக்களும் தங்களுடைய வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.  

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் வழக்கம் போல இன்று காலை 7 மணிக்கு தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். மனைவி ஷாலினியுடன் வாக்குச்சாவடிக்கு வந்த அவருடன் ரசிகர் ஒருவர் நெருக்கமாக செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபமடைந்த அஜித், ரசிகரிடமிருந்து செல்போனை பிடுங்கிவிட்டார். பிறகு “மாஸ்க் போடுங்க” என்று எச்சரித்து அந்த நபர் கையில் செல்போனை திரும்பிக் கொடுத்தார்.


அதேபோல நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். தன்னுடைய வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து அவர் ஓட்டு போட்டார். பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிள் வந்து வாக்குப் பதிவு செய்ததாக அவருடைய தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை இன்னும் நடிகர் விஜய் உறுதி செய்யவில்லை.

அந்த வரிசையில் நடிகர் விக்ரம் தன்னுடைய வீட்டில் இருந்து நடந்து  வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. ஜனநாயகத்தின் கடமையை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் நடிகர் விக்ரம் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. விக்ரமின் இந்த செயல்பாட்டுக்கு அவருடைய ரசிகர்களும், நெட்டிசன்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 
 

From Around the web