அன்பு தொல்லை அச்சமாக மாறிப் போன பயங்கரம்- அனிகா சீக்ரெட்ஸ்..!

 

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மற்றும் த்ரிஷாவின் மகளான நடித்தவர் அனிகா சுரேந்திரன். அதை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்தார். தற்போது இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடைய அனைத்து சமூகவலைதள பக்கங்களிலும் அனிகா படு ஆக்டிவாக இருக்கிறார். வாரம் ஒருமுறைய தன்னுடைய ஆக்கத்திறன் மிக்க படைப்புகளை பதிவிட்டு லைக்ஸ் அள்ளிவிடுவது அவருடைய வழக்கம். அவருடைய ஹோம்லி தோற்றத்திற்கு இணையாக அனிகாவின் மார்டன் தோற்றமும் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது.

அண்மையில் ரசிகர்களுடன் லைவில் அனிகா கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் ஒரு கேள்வி கேட்டார். அதை கேட்டு அனிகா ஆடிப்போயிவிட்டார். அதாவது தங்களை மிகவும் நேசிக்கும் ரசிகர் உங்களிடம் தன்னுடைய காதலை தெரிவித்துவிட்டு, அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்பதே அந்த ரசிகரின் கேள்வி.


இதேபோன்ற ஒரு சம்பவம் தனக்கு இதற்கு முன்னர் நடந்ததாக பதில் தெரிவித்தார் அனிகா. மேலும், அதை கண்டு முதலில் பயந்தாலும் பிறகு புரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். அந்த கேள்வி பதில் பகுதியில் தன்னுடைய உயரம் தொடர்பான தனக்கு இருக்கும் தாழ்வு மனம்பான்மையை வெளிப்படையாக கூறியுள்ளார் அனிகா.

பிறகு கொரோனா ஊரடங்கு மற்றும் அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் போன்றவற்றை கண்டபிறகு தன்னுடைய தாழ்வு மனம்பான்மையை புரிந்துகொண்டதாகவும் வீடியோவில் அனிகா கூறியுள்ளார். 

From Around the web