ஓடிடியில் வெளியாகிறது அனிமல் படம்! எப்போ வெளியாகிறது தெரியுமா ?

 
1

ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனம் வந்த போதும், இப்படம் ரூ.900 கோடிக்கும் மேல் வசூலாகி ரன்பீர் கபூர் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படமாக மாறி உள்ளது.

அனிமல் படம் முழுக்க ஆண் சிந்தனை இருப்பதாகவும்,பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும் படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. அதோடு படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. ஒரு கிளாமர் ரோலுக்காகவே அவரை பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும், அவரின் லிப் லாக் காட்சி சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இவருடைய கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பாலிவுட்டிற்கு சென்ற ராஷ்மிகா படு மோசமாக ஆகிவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் கழுவி ஊற்றினார்கள்.

இந்நிலையில் இதன் வெற்றிவிழா கடந்த வாரம், மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ரன்பீர் கபூர், ஆலியா பட், நடிகர் அனில் கபூரும், உபேந்திர லிமாயே, தயாரிப்பாளர் பூஷன் குமார், நடிகர் பிரேம் சோப்ரா,கரன் ஜோகர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், தமன்னா ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான இந்த படத்தில் எட்டு நிமிட காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், அந்த காட்சி எந்தவிதமான கட்டும் இல்லாமல் Netflix ஓடிடி தளத்தில் ஜனவரி 26ம் தேதி பார்க்கலாம்.

From Around the web