டிடிஎஃப் வாசன் படத்தில் இணைந்த அனிருத்!
Jul 23, 2023, 14:42 IST

பிரபல யூடியுபர் டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாட உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் அனிவி இசை அமைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய யூடியூப்பர் டிடிஎப் வாசன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார். மஞ்சள் வீரன் திரைப்படம் குறித்த அறிவிப்பை டிடிஎப் வாசனின் பிறந்தநாளன்று வெளியிட்டனர். மேலும், இம்மாத இறுதியில் தொடங்க உள்ள இப்படத்தின் அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாட உள்ளதாக இன்று படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.