‘லியோ’ படத்தின் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட அனிருத்!! 

 
1

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Leo

லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகத்தில் ஃபகத் பாசிலை காஷ்மீரில் சந்தித்தாக ஜோஸ் பேசும் வசனங்களைப் பகிர்ந்து அந்த இடத்திலிருந்து லியோ படம் துவங்கும் என்று ரசிகர்கள் கணித்துவருகின்றனர். இதற்கெல்லாம் இல்லையா சார் ஒரு எண்டு எனும் அளவுக்கு ரசிகர்களின் பதிவுகள் அமைந்துள்ளன.

இயக்குநர் லோகேஷின் முந்தையப் படங்களான மாஸ்டர், விக்ரம் படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் இசை பெரும் பங்கு வகித்தது. அந்த அளவுக்கு பாடல்கள் மூலமாகவும் பின்னணி இசையின் மூலமாகவும் படத்துக்கு வலு சேர்த்திருந்தார்.


 அந்த வகையில் லியோ பட ப்ரமோ வீடியோவில் அனிருத்தின் பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதனை தனிப் பாடலாக வெளியிடுமாறு அனிருத்துக்கு ரசிகர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பாடல் உருவான விதத்தை வீடியோவாக அனிருத் வெளியிட்டுள்ளார்.

From Around the web