சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க நோ சொன்ன அனிருத்…!

 
1

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி தன்னுடைய கடின உழைப்பால் தற்போது பிரபல நடிகராக மாறியுள்ளவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான 7 படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்துள்ளார். இவர்களின் கூட்டணியில் வெளிவரும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு அனிருத்தை இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க மறுப்பு தெரிவித்ததாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கு காரணம் அனிருத் ‘ஜெயிலர், இந்தியன் 2, லியோ‘ போன்ற பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருவதால் தான் சிவகார்த்திகேயன் படத்திற்கு நோ சொன்னதாக சொல்லப்படுகிறது.

From Around the web